உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணத்தில் விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் - டி.ஐ.ஜி. ஆனி விஜயா உறுதி

Published On 2022-05-26 10:26 GMT   |   Update On 2022-05-26 10:26 GMT
அரக்கோணத்தில் விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா உறுதியளித்தார்.
அரக்கோணம்:

அரக்கோணம் டி.ஐ.ஜி. ஆனி  விஜயா  நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லா நகரங்களிலும் பள்ளி வேலை  செல்லும் ஊழியர்கள்  நேரங்களை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்கள் நகரங்களில் கடக்கும் நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது நடைமுறையில் உள்ளது. அதை போக்குவரத்து காவலர்கள் முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் அரக்கோணம் பகுதியில் இந்த நேரங்கள் நடைமுறைப்படுத்த வில்லை என்பது கவலையாக உள்ளது. எனினும் இதை அமல்படுத்தி அரக்கோணத்தில் பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும். 

பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் தங்கள் வாகனத்தை நிறுத்தவோ இயக்கவும் முன்வர வேண்டும்.

தனிநபர் ஒழுக்கம் இன்மையே பெரும் குற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. எனவே தனிநபர் ஒழுக்கம் பொதுமக்களிடையே இருந்தால் குற்றங்கள் குறையும்போலீஸ் நிலையம் செயல்பாடு என்பது காவலர்களின்  எண்ணிக்கை பொறுத்து அல்ல அவர்கள் திறமை மற்றும் செயல்பாடு பொருத்து அமையும் எனவே எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல தற்போது நடைபெறும் குற்றங்களை வெகுவிரைவில் கண்டு  பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனவே திறமையான காவலர்கள் திறமையாக செயல்படுவதால் அதற்கான தேவையும் தற்போதைக்கு இல்லை.

சிசிடிவி கேமரா காவல்துறை பிரிவு பெரும் உதவியாக இருப்பதாகவும் குற்றவாளிகளை செயல்பாடுகளை வெளிப்படுத்துவதோடு அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல் சிக்குகின்றனர். காவல் துறையில் சிசிடிவி கேமரா பெரும்பங்கு ஆற்றி வருகிறது. 

அரக்கோணம் அடுத்த சாலையில் போலீஸ் நிலையம் பரிந்துரையை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக வும் அதற்கான உத்தரவை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது  போலீஸ்சுப்பிரண்டு தீபா சத்யன் உடன் இருந்தார்.
Tags:    

Similar News