உள்ளூர் செய்திகள்
பட்டமளிப்பு விழா நடந்த காட்சி.

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2022-05-24 10:09 GMT   |   Update On 2022-05-24 10:09 GMT
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. 2000 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 650 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 

22 ஆண்டுகளுக்கு பிறகு இக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அப்துல்காதிர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் வாழ்த்திப் பேசினார்.

இதைத்தொடர்ந்து கல்லூரியில் பயின்ற 195 மாணவ- மாணவிகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வாணையர் சுருளியாண்டி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 

அவர் பேசும்போது மாணவர்கள் தன்னம்பிக்கையோடு நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதில் 130 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் முனைவர்கள் கணேசன், மேனகா, வினோத், வின்சென்ட் ராஜேஷ், அருள்மனோகரி, ஆ.கணபதி, நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டி, 

வல்லராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவ ஆனந்த், ம.தி.மு.க. பிரமுகர் நடுவை முருகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News