உள்ளூர் செய்திகள்
மதுரை ஐகோர்ட்

வீரகாளியம்மன் கோவிலில் கிடா வெட்டு குறித்த வழக்கு- பேச்சுவார்த்தை குழு அமைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-05-23 10:47 GMT   |   Update On 2022-05-23 10:47 GMT
நீதிபதி 2 தரப்பினர்களுக்கும் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பி அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாத்து விழா நடத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
மதுரை:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவுக்கு உட்பட்ட நல்லூர் மற்றும் சிரத்தாங்குடி கிராமத்தில் உள்ள பிடாரி வீரகாளியம்மன் கோவிலில் கிடா வெட்டுத் திருவிழா இரு கிராம பொதுமக்களினால் பாரம்பரியமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு நாளை (24-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (25-ந் தேதி) கிடா முட்டு நடத்துவதற்கு மாவட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமலும் பாரம்பரிய முறைகளை பின்பற்றப்படாமலும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் இரண்டு கிராம மக்களிடையே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் மனு கொடுத்திருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கிடாவெட்டு நடத்துவது தொடர்பாக இரு குழுவினர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் சுமுகமான முறையில் கிடா வெட்டு நடத்துவதற்காக திருமயம் தாசில்தார் 2 தரப்பினர்களுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதை ஏற்ற நீதிபதி 2 தரப்பினர்களுக்கும் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பி அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாத்து விழா நடத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
Tags:    

Similar News