உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

அதியமான் பொறியியல் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கு

Published On 2022-05-22 09:55 GMT   |   Update On 2022-05-22 09:55 GMT
அதியமான் பொறியியல் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
ஓசூர்,

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில், உயிர் தொழில்நுட்பவியல் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. 

விழாவில் துறை தலைவர் மணிவாசகன் வரவேற்று பேசுகையில், உயிர்தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள் முன்னேற்றம் குறித்து விளக்கினார். கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில் உயிர்தொழில்நுட்பவியல் துறையில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதையைக் கூறி, மாணவர்கள் எவ்வாறு தங்கர் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விவரித்தார். 

மேலும் இந்த துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளை விளக்கிப் பேசிய அவர், இந்த உலகம், எதிர்காலத்தில் உயிர்தொழில்நுட்பவியல் சார்ந்து தான் இயங்கும்" என்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக, தனியார் நிறுவன விஞ்ஞானி டாக்டர் மதுசூதன் கலந்துகொண்டு, உயிர் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய மாணவர்கள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கினார்.  

கவுரவ விருந்தினராக டாக்டர் ஜெகநாதன் கலந்துகொண்டு மாணவர்களின் செயல்பாடுகளையும், அவர்கள் ஏற்பாடு செய்த, நூதனமான கண்காட்சியையும் பாராட்டினார் மேலும், தடுப்பூசி தயாரிப்பில் உயிர்தொழில்நுட்ப வியாளரின் முக்கியத்து வத்தை எடுத்துரைத்தார். இந்த கருத்தாங்கில் கலந்துகொண்ட உயிர்தொழில்நுட்பவியல் விஞ்ஞானி டாக்டர்.சிவபாதசேகரன், "உயிர்மூலக்கூறுகள்" என்ற தலைப்பில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். 

பின்னர், விளையாட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கல்விசார் முதலிடம் வகித்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டது. கருத்தரங்கில், 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கு நிகழ்வுகளை, மாணவர் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்பெருமாள் தொகுத்து வழங்கினார். 

இணை பேராசிரியர் சரண்யா, உதவி பேராசிரியர் கவிதா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இதில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர் முடிவில், மாணவர் ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா நன்றி கூறினார்.
Tags:    

Similar News