உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.103 ஆக குறைந்தது- டீசல் ரூ.95-க்கு விற்பனை

Published On 2022-05-22 09:10 GMT   |   Update On 2022-05-22 09:10 GMT
நெல்லையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.103 ஆக குறைந்தது. டீசல் லிட்டர் ரூ.95-க்கு விற்பனை ஆகிறது.
நெல்லை:

மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்ததால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 1½ மாதங்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நெல்லையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.16-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.30 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் ரூ.8.22 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் ரூ.6.70 காசுகள் குறைக்கப்பட்டு இன்று விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி நெல்லையில் இன்று பெட்ரோல் ரூ.102.94-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பங்குகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.111.33-க்கும், டீசல் லிட்டர் ரூ.101.44-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வரி குறைப்பு காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.94.74 -க்கு விற்பனையாகிறது.

சிவகிரி பகுதியில் ரூ.111.86-க்கு விற்கப்பட்டு வந்த பெட்ரோல் இன்று ரூ.103.65 ஆக குறைந்தது. இதே போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.101.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.6.70 குறைந்து ரூ.95.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News