உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு சிலம்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிலம்ப பயிற்சி

Published On 2022-05-22 07:18 GMT   |   Update On 2022-05-22 07:18 GMT
நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிலம்ப பயிற்சி அளித்தனர்.
நிலக்கோட்டை:

 நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடை காலத்தை உபயோகமாக பயன்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் தானாக முன்வந்து பொது மக்கள் ஒத்துழைப்புடன் 5 நாள் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாம் மற்றும் பள்ளி ஆசிரியர் மாணவர்கள் கையெழுத்து இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

விழாவில் கராத்தே, யோகா, நடனம், நடிப்பு, கைவினைப்பொருட்கள் செய்தல் பயிற்சி, ஓவியம், சிலம்பம், கதை எழுதுதல், நாடக நடிப்பு, கையெழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மதிய உணவுடன் அனைத்து ஆசிரியர்கள் விடுமுறை தினத்தை கூட பொருட்படுத்தாமல் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி மாணவர்க–ளுக்குப் பயன்படும் விதமாக கோடைகாலத்தை பயனுள்ள முறையில் பயிற்சி அளித்ததை கிராம மக்கள் பாராட்டினார்கள்.

இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாண்டி, சென்றாய பெருமாள், பெருமாள், பள்ளி ஆசிரியர்கள் பால்ராஜ், செந்தமிழ்ச் செல்வன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News