உள்ளூர் செய்திகள்
மேலூர் அருகே செமினிபட்டியில் இன்றுநடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மக்கள்

மீன்பிடித் திருவிழாவில் பாம்புகள் பிடிபட்டதால் பரபரப்பு

Published On 2022-05-21 10:40 GMT   |   Update On 2022-05-21 10:40 GMT
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பாம்புகள் பிடிபட்டன.
மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது செம்மணிப் பட்டி. இங்கு உள்ள கரும்பாச்சி கண்மாயில் விவசாய பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் இங்கே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு இன்று காலை மீன்பிடித் திருவிழா அங்கு நடைபெற்றது. 

இதனுடைய திருவிழாவை முன்னிட்டு செமினிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நள்ளிரவு முதல் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இன்று காலையில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீச கண்மணியை சுற்றிலும் கூடியிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா, கூடை போன்ற மீன்பிடி சாதனங்களை கொண்டுவந்து மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

 இதில் விரா, கட்லா, கெளுத்தி, கெண்டை போன்ற ஏராளமான நாட்டு வகை மீன்களைப் பிடித்துச் சென்றனர். பொதுமக்கள் மீன்களைப் பிடிக்கும் போது தண்ணீரில் கிடந்த பாம்புகளையும் பிடித்தனர். பிடித்த பாம்புகளை கரைகள் குவியலாக போட்டு வைத்துள்ளனர். 

அதிஷ்டவசமாக பாம்புகள் யாரையும் தீண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்த ஊரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கார்த்திக் கூறும்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் ஆயக்கட்டு விவசாயிகள் தங்கள் பணிகள் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் இந்த பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழாவை நாங்கள் நடத்துவது வழக்கம் அதுபோல் இன்று நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

 இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது எங்கள் பகுதி மக்களின் நம்பிக்கை என இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News