உள்ளூர் செய்திகள்
நந்தகுமார் எம்.எல்.ஏ. கல்வி உதவித்தொகை வழங்கிய காட்சி.

அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

Update: 2022-05-20 10:09 GMT
அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
வேலூர்:

தேர்தல் பிரச்சாரத்தின் போது அணைக்கட்டு தொகுதி யில் ஏழை எளிய மாணவர்கள் கல்விக்கு உதவுவதாக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ நந்தகுமார் வாக்குறுதி அளித்தார். அதன்படி அந்த தொகுதியை சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் உதவி செய்து வருகிறார்.

வேலூர் அருகே உள்ள பொய்கை மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (வயது 15) என்ற மாணவர் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி கை கால் செயலிழந்தது.அந்த மாணவருக்கு நந்தகுமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று காலை மாணவர் கோகுலுக்கு நந்தகுமார் எம்எல்ஏ தனது சொந்த செலவில் ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.

 மேலும் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஏழை மாணவ மாணவிகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் அணைக்கட்டு தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் மு.பாபு, குமார பாண்டியன், கணியம்பாடி மாவட்ட கவுன்சிலர் பாபு, சிட்டி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News