உள்ளூர் செய்திகள்
மேடை போல் அமைக்கப்பட்ட வேகதடையை மாற்றி அமைக்கும் பணியாளர்கள்.

பூச்சிக்காடு, மணிநகர் விலக்கில் மேடை அமைப்பில் அமைக்கப்பட்ட வேகத்தடை உயரம் குறைப்பு

Published On 2022-05-20 08:45 GMT   |   Update On 2022-05-20 08:45 GMT
சாத்தான்குளம் அருகே பூச்சிக்காடு, மணிநகர் விலக்கில் மேடை அமைப்பில் அமைக்கப்பட்ட வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட மணிநகர் விலக்கிலும், அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பூச்சிக்காடு விலக்கில் அடிக்கடி விபத்து நிகழ்ந்த வண்ணம் இருந்தது.

இதனால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று  2 இடங்களிலும்  நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகதடை அமைக்கப்பட்டது. வேகத்தடையான மற்ற இடங்களை போல் இல்லாமல் ஒரு அடி  உயரத்துக்கு  மேடை  போல் அமைக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். மேலும்  எந்நேரமும் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், அதனை அகற்றி வழக்கமான வேகத்தடை அமைக்க வலியுறுத்தினர்.

இதையடுத்து ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இந்த வேகத்தடை அளவை குறைக்க வலியுறுத்தி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் உதவி பொறியாளர் முத்துபெருமாள், சாலை ஆய்வாளர் முருகன், தட்டார்மடம்   இன்ஸ்பெக்டர்  பவுலோஸ் ஆகியோர் இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர்  ஆர்.எஸ்.  சுந்தரவேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பவன் உள்ளிட்டோர்  நேற்று அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, வேகத்தடையை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து   மேடை  போல் அமைக்கப்பட்ட வேகத்தடையை உடைத்து அரை அடி குறைத்து வேகத்தடை மாற்றி அமைக்கப்பட்டது. இதனை வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
Tags:    

Similar News