உள்ளூர் செய்திகள்
கடிதம்

நாடாளுமன்ற அலுவல் குழுவுக்கு எதிர்ப்பு

Published On 2022-05-18 11:04 GMT   |   Update On 2022-05-18 11:04 GMT
மதுரைக்கு வருகை தரும் நாடாளுமன்ற அலுவல் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டது.
மதுரை

நாடாளுமன்ற அலுவல் மொழி துணைக்குழு துணைத்தலைவர் பார்ட்ருஹரி மக்தாப், அமைப்பாளர் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோர் மதுரைக்கு சுற்றுப்பயணம் வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட 2 பேருக்கும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிப்பதாவது:-

மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற அலுவல் மொழியின் துணைக்குழு வருகிற மே 19, 20-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்து அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய ஆய்வு செய்ய உள்ளது என்று தெரிகிறது.

அலுவல் மொழி விதிகள் கடந்த பல ஆண்டுகளாக மீறப்பட்டு வருகிறது. அதன் நோக்கம் பிராந்திய மொழி மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பது தான். அதுவும் தவிர இந்த விதிகள் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. 

மத்திய அரசின் அலுவல் மொழி விதிகள் சட்டப்படி மாநிலங்கள் “ஏ” “பி” “சி” என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. அந்த மாநிலங்களின் பட்டியலில் எதிலுமே தமிழ்நாடு இடம் பெறவில்லை. இப்படி இருக்கையில் அலுவல் மொழி துணைக் குழுவின் மதுரை வருகை எதற்கு?. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் அலுவல் மொழி பிரிவு மற்றும் இந்தி பிரிவு அமைக்கப்பட்டு இருப்பது ஏன்? அது விதிகளின்படி தேவை இல்லையே? எனவே மதுரைக்கு திட்டமிடப்பட்டு உள்ள அலுவல்மொழி துணைக்குழு வருகையை ரத்து செய்யுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News