உள்ளூர் செய்திகள்
நூல் விலையை குறைக்ககோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிர போராட்டம் நடந்த காட்சி.

நூல் விலையை குறைக்கக்கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் - தொழில் துறையினரும் கலந்து கொண்டனர்

Published On 2022-05-17 09:13 GMT   |   Update On 2022-05-17 09:14 GMT
மத்திய அரசு திருப்பூரில் பனியன் தொழிலில் காப்பாற்ற நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்
திருப்பூர்:

பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது மத்திய அரசு திருப்பூரில் பனியன் தொழிலில் காப்பாற்ற நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், போல் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்பினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News