உள்ளூர் செய்திகள்
உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள்.

உழவர் சந்தையில் 20 டன் காய்கறிகள் விற்பனை

Published On 2022-05-17 09:06 GMT   |   Update On 2022-05-17 09:06 GMT
நாமக்கல் உழவர் சந்தையில் 20 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
நாமக்கல்:

நாமக்கல் உழவர் சந்தைக்கு கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், வேலூர், நாமக்கல், புதுச்சத்திரம், எலச்சி–பாளையம் உள்ளிட்ட பகுதிகளின் சுற்றுபுறத்தில் இருந்து சுமார் 20 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சுரைக்காய், பீன்ஸ், வெண்டைகாய்! வாழைக்காய், பச்சை மிளகாய், கீரைகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.தக்காளி வரத்து குறைவால் ஒருகிலோ ரூ.60 லிருந்து 70 க்கு விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகள் விலை விபரம் (1 கிலோவுக்கு) கத்தரிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.40, அவரை ரூ.48, கொத்த அவரை ரூ.30, முருங்கைகாய் ரூ.40, முள்ளங்கி ரூ.30, புடலங்காய் ரூ 44, பாகற்காய் ரூ.40, பீக்கங்காய் ரூ.60, வாழைக்காய் ரூ 28, வாழைப்பூ ரூ.10, வாழைத்தண்டு ரூ.10, பரங்கிகாய் ரூ 20, பூசணி ரூ.20, சுரைக்காய் ரூ.15, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, கோவக்காய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ 18, பெரிய வெங்காயம் ரூ 24, கீரை ரூ 30, பீன்ஸ் ரூ.90, கேரட் ரூ.48, பீட்ரூட் ரூ 48, உருளைகிழங்கு ரூ.32 , முட்டைகோஸ் ரூ.28, காளிபிளவர் ரூ.20, குடைமிளகாய் ரூ.52 க்கும் கொய்யா , வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டதாக உழவர் நிர்வாக அலுவலர் மல்லிகா தெரிவித்தார்.
Tags:    

Similar News