உள்ளூர் செய்திகள்
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் வைத்திலிங்கத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், விருது வழங்கிய போது எடுத்த படம

சேலம் மண்டல வணிகர் சங்க பேரமைப்பு தலைவருக்கு விருது

Update: 2022-05-16 10:07 GMT
சேலம் மண்டல வணிகர் சங்க பேரமைப்பு தலைவருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
தருமபுரி,

தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவரும் தர்மபுரி சேலம் நாமக்கல் மண்டல வணிகர் சங்க பேரமைப்பு தலைவருமான வைத்திலிங்கம் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் வணிக சேவைகள் செய்து வருகிறார்.

இவரது சேவைகளை பாராட்டி முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாரத் வைத்தியத்திற்கு சமூக சேவைக்கான விருது வழங்கி பாராட்டினார்.
 இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவர் விக்ரமராஜா செயலாளர் கோவிந்தராஜ் பொருளாளர் சதுக்கத்துல்லா மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News