உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மாற்றுத்திறனாளி மாணவி வேறு அறையில் தேர்வு எழுதியதால் சர்ச்சை

Published On 2022-05-15 09:59 GMT   |   Update On 2022-05-15 09:59 GMT
திருவாரூர் அருகே மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனக்கு ஒதுக்கிய அறையில் தேர்வு எழுதாமல் வேறு அறையில் தேர்வு எழுதியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். 

இந்தநிலையில் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்ற அன்று மாற்றுத்திறனாளி மாணவியான திவ்யா என்பவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்வு எழுதாமல் தேர்வுக்கு வராத மாணவியான வலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இனிதாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மலர்கொடி என்பவர் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து விடுவிக்க–ப்பட்டுள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் தலைமையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த விவகாரத்தில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதா அல்லது தவறுதலாக மாணவி திவ்யா மாற்றி அமர வைக்கப்பட்டாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News