உள்ளூர் செய்திகள்
கைது

வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த பெண் கைது

Update: 2022-05-14 08:52 GMT
வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரியபிரசாத். அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோகிலா, அவரது நண்பர் சரவணன் என்பவருடன் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. கோகிலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சரவணனை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News