உள்ளூர் செய்திகள்
பெரியார் பல்கலைக்கழக மையத்தில் யோகா பயிற்சி

தர்மபுரியில் சர்வதேச யோகா தின முன்னோட்ட நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்பு

Update: 2022-05-13 19:25 GMT
பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவாக்க மையத்தில் இருந்து தர்மபுரி நான்கு சாலை சந்திப்பு வரை பேரணி நடைபெற்றது.
8வது சர்வதேச யோக தினத்தின் கவுண்டவுன் முன்னோட்ட நிகழ்வு, தருமபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவு மையத்தில்
நடைபெற்றது.

தர்மபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகமும்,  நாட்டு நலப்பணி திட்டமும்  (என்எஸ்எஸ்) இணைந்து இந்த முன்னோட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் டி சாந்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவாக்க மையத்தின்  இயக்குனர் டாக்டர் பி மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.  

நேரு யுவகேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர்  ஜி வேல்முருகன், மன அறக்கட்டளையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.தண்டவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

யோகா பயிற்சிக்கு யோகா ஆசிரியைடி. ஜெயப்பிரியா தலைமை தாங்கினார். யோகா பயிற்சி நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த 300  மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியையொட்டி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவாக்க மையத்தில் இருந்து தர்மபுரி நான்கு சாலை சந்திப்பு வரை பேரணியும் நடைபெற்றது. 
Tags:    

Similar News