உள்ளூர் செய்திகள்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-13 09:31 GMT
திருவாரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:

மத்திய பல்கலைக் கழகங்களில் கியூட் நுழைவு தேர்வை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை கண்டித்து திருவாரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் செல்லக்கண்ணு, துணை பொது செயலாளர் சின்னை.பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சிவகுரு, கலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் நாகை சுபாஷ் சந்திரபோஸ், மயிலாடுதுறை ஸ்டாலின், காரைக்கால் நிலவழகன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அரசு.தாயுமானவன், மாவட்ட பொருளாளர் பிச்சைக்கண்ணு, மாணவர் சங்க மாநில துணை தலைவர் ஆறு.பிரகாஷ், மாவட்ட செயலாளர் ஹரி சுர்ஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News