உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது

Published On 2022-05-13 05:31 GMT   |   Update On 2022-05-13 07:45 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,112-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ. 38 ஆயிரத்து 584க்கு விற்றது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.472 குறைந்தது. ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 112க்கு விற்றது.

கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ.4 ஆயிரத்து 764 ஆக இருந்தது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.63 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.40க்கு விற்கிறது.

கடந்த 7-ந்தேதி தங்கம் பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.328 குறைந்து இருந்தது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.904 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News