உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொண்டத்துகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2022-05-11 10:20 GMT   |   Update On 2022-05-11 10:20 GMT
பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:
 
பிரசித்திபெற்ற பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த குண்டம் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. 

திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் ராஜா, ஆய்வாளர் ஆதிரை ஆகியோர் கண்காணிப்பில் உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ. 24 லட்சத்து 26 ஆயிரத்து 820 ரொக்கம், தங்க நகைகள் 162 கிராம் 600 மில்லி கிராம், வெள்ளி 195 கிராம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News