உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாணியம்பாடி அருகே மலைகிராம சாலையை விரிவாக்க வனத்துறை அலுவலர்கள் ஆய்வு

Published On 2022-05-11 09:27 GMT   |   Update On 2022-05-11 09:27 GMT
வாணியம்பாடி அருகே மலைகிராம சாலையை விரிவாக்க வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ் புதூர்-காவலூர் பகுதிக்கு செல்ல கூடிய வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நூற்றுக்கணக்கான வாகனங்கள் காவலூர், ஜமுனாமரத்தூர்,போளூர்,திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 9 அடி அகலமே உள்ள இந்த சாலையில் பயணிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் பல வருடங்களாக சாலையை  அகலபடுத்த கோரிக்கை விடுத்து வந்தனர். 

கடந்த பிப்ரவரி மாதம் பழைய சாலையை சுரண்டி எடுக்காமல் புதிய தார்சாலை போடப்பட்டதால் சாலையில் உயரம் 2 அடிக்கு மேல் உள்ளது. சாலை ஓரம் 2 அடி பள்ளம் ஏற்பட்டது .இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

சாலையை அகலப்படுத்த கோரி மலைகிராம மக்கள் 2 முறை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையை அகலப்படுவதற்கு தேவையான நிலத்தை வழங்க வனத்துறையிடம் முறையாக விண்ணப்பிக்க பட்டது.இந்த நிலையில் சாலையை வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது நெடுஞ்சாலைத்துறையினடம் சாலையின் இருபுறங்களிலும் எவ்வாறு அமைக்கப்பட உள்ளது. நீர் வெளியேற எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று கேட்டறிந்தார். மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் பழைய சாலையை சுரண்டி எடுக்காமலேயே புதிய தார்சாலை அமைக்க அனுமதித்ததற்கு என்ன காரணம், என்றும் பல்வேறு கேள்வி எழுப்பினார். 

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜா லா, ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News