உள்ளூர் செய்திகள்
கொள்ளை

பொன்னேரி அருகே தாய்-மகனை கத்திமுனையில் மிரட்டி ரூ.1 லட்சம் நகை கொள்ளை

Published On 2022-05-11 04:24 GMT   |   Update On 2022-05-11 04:24 GMT
குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் முகமூடி கும்பல் வீடு புகுந்து கத்திமுனையில் நகை, பணத்தை கொள்ளை டித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகையில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் சாமி, முனுசாமி. இவர்களுடன் சுமதியின் தாய் ஜெயம்மாளும் தங்கி உள்ளார்.

சாமியின் மனைவி பிரசவத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்பு குளம் கிராமத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக சாமி சென்று விட்டார்.

இதையடுத்து வீட்டில் சுமதி, அவரது இளைய மகன் முனுசாமி, தாய் ஜெயம்மாள் மட்டும் இருந்தனர். இரவு அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.

நள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் வெள்ளி குத்து விளக்கை கொள்ளையடித்தனர்.

பின்னர் அவர்கள் அறையில் தூங்கிக் கொண்டு இருந்த சுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து தங்க செயினை சுழற்றி தரும்படி மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த முனுசாமி கொள்ளையர்களை தடுக்க முயன்றார்.

ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் சுமதி, அவரது மகன் முனுசாமி, ஜெயம்மாள் ஆகியோரை குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

பயந்து போன சுமதி தான் அணிந்து இருந்த 9 பவுன் செயினை கொள்ளையர்களிடம் கழற்றி கொடுத்தார். உடனே முகமூடி கும்பல் நகை பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் முகமூடி கும்பல் வீடு புகுந்து கத்திமுனையில் நகை, பணத்தை கொள்ளை டித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருக றார்கள்.

Tags:    

Similar News