உள்ளூர் செய்திகள்
வண்ணார்பேட்டை படித்துறையில் கலெக்டர் விஷ்ணு மரக்கன்றுகளை நட்ட போது எடுத்தபடம்.

பாபநாசம் முதல் மருதூர் வரை கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்-கலெக்டர் விஷ்ணு பேச்சு

Published On 2022-05-10 10:25 GMT   |   Update On 2022-05-10 10:25 GMT
பாபநாசம் முதல் மருதூர் வரை தாமிரபரணி கரையோரம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என நெல்லை கலெக்டர் விஷ்ணு பேசினார்.
நெல்லை:

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் சக்திநாதன் நினைவு தினத்தையொட்டி நெல்லை தாமிபரபரணி நதிகரையோரம் மரக்கன்று நடுவிழா இன்று நடைபெற்றது.

வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சட்டசபையில் கலைபண்பாட்டுத்துறை மானிய கோரிக்கயைின் போது நாட்டுப்புற கலைகளை அழியாத வண்ணம் பாதுகாக்கும் வகையில் அவ்வப்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பாபநாசம் முதல் மருதூர் அணைக்கட்டு வரை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள் விரைவில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மானூர் பெரியகுளம் பாசன நில விவசாயிகள் நல சங்கம், கல்லிடைக்குறிச்சி லூர்து ராஜ், பாபநாசம் மூர்த்தி ஆகியோருக்கு சக்தி விருதுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News