உள்ளூர் செய்திகள்
கெட்டுப்போன பழங்களை அதிகாரிகள் ரசாயனம் ஊற்றி அழித்த காட்சி.

தாராபுரம் கடைகளில் கெட்டுப்போன 320 கிலோ பழங்கள் - 70 கிலோ சிக்கன் அழிப்பு

Published On 2022-05-10 10:14 GMT   |   Update On 2022-05-10 10:14 GMT
பானிபூரி கடைகளில் கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிரஞ்சீவி, விஜயராஜன், ரகுநாதன், சண்முகம் ஆகியோர் தாராபுரம் பஸ் நிலையம், பொள்ளாச்சி ரோடு, அமராவதி ரவுண்டானா பகுதியில் பழக்கடை, ஓட்டல்கள் ,பேக்கரிகள் ,சவர்மா கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது பழக்கடையில் கெட்டுப்போன நிலையில் ஜூஸ் போடவும் விற்பனைக்கு வைத்திருந்த மாம்பழம், ஆப்பிள் உள்பட 320 கிலோ பழங்கள் கைப்பற்றப்பட்டு ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டது .

மேலும் ஓட்டல்கள், சவர்மா கடைகளில் தரமற்றநிலையில்வைத்திருந்த 70 கிலோ  சிக்கனும் அழிக்கப்பட்டது. பானிபூரி கடைகளில் கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. கோடைகாலம் என்பதால் நமது தட்ப வெப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் உண்ண வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை வேண்டுகோள் விடுத்துள்ளார் .
Tags:    

Similar News