உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2022-05-10 09:30 GMT
நன்னிலம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள திருப்பள்ளி முக்கூடல் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). தொழிலாளி. இந்நிலையில் அண்ணாதுரைக்கும், அவரது மனைவி மலருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அண்ணாதுரை, வயலுக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், அண்ணாதுரையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News