உள்ளூர் செய்திகள்
மணிக்கூண்டு சந்திப்பில் பஸ்சை சிறைபிடித்து ெபாதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி.

பாளையங்கோட்டையில் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா

Published On 2022-05-09 09:49 GMT   |   Update On 2022-05-09 09:49 GMT
புதிய பைப்லைன் அமைக்ககோரி பாளை மணிக்கூண்டில் இன்று பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நெல்லை:

பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் மணிக்கூண்டு அருேக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த பாளை மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாதுஷா, இன்ஸ்பெக்டர் திருப்பதி, கவுன்சிலர்கள் பவுன்ராஜ், இந்திராமணி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

7-வது வார்டுக்கு உட்பட்ட சாந்திநகரில் 11 தெருக்கள் உள்ளது. இங்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர்  குடிநீர் வழங்குவதற்காக இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டது. அவை தற்போது பழுதடைந்துள்ளதால் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது.

இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

அப்போது பேசிய அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதி நியமிக்கப்படவில்லை. தற்போது கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  முதல் கூட்டத்திலேயே ரூ.5.6 லட்சம் மதிப்பில் புதிய பைப் லைன் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் வழங்கியதும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News