உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டம்

பா.ஜனதா ஆலோசனை கூட்டம்

Update: 2022-05-07 09:43 GMT
கும்பகோணத்தில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கும்பகோணம்:

கும்பகோணத்தில் பாஜகவின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தில் நடந்த பாஜகவின் மாவட்ட அளவிலான கூட்டத்தில் திருவாரூரில் உள்ள தேரோடும் தெற்கு வீதியை கருணாநிதியின் பெயரில் மாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து, வருகிற 12ம் தேதி திருவாரூரில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது இதில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் மற்றும் பசும்பொன் பாண்டியன், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News