உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Update: 2022-05-07 09:32 GMT
கரூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய கட்சி நிர்வாகி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ளது கொத்தமல்லிமேடு. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி உப்பிலியப்பட்டி, கவுண்டன்பட்டி மக்கள் தோகைமலை, பாளையம் சாலையில் நேற்று முன்தினம் சாலை மறியல் செய்தனர்.

இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க. உறுப்பினரான உப்பியப்பட்டி மகாமுனி, கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அண்ணாவி மகன்கள் சண்முகம், ஆனந்தன் சகோதரர்கள், பட்டநாதன் என்கிற ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் மீது சட்டவிரோதமாக ஒன்றுக்கூடியது,

மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது என 2 பிரிவுகளின் கீழ் தோகைமலை போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

Similar News