உள்ளூர் செய்திகள்
ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடை பெற்ற போது எடுத்த படம்.

தொட்டியம் ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

Update: 2022-05-06 09:55 GMT
தொட்டியம் ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடை பெற்றது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம் திருவெங்கடபுரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது  

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தங்களது தோளிலும், தலையிலும், தேரை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து சென்றனர்.

பின்பு மறுநாள் காலை மாவிளக்கு பூஜை மற்றும் கிடா வெட்டு நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவிழாஏற்பாடுகளை  திருவெங்கடபுரம் ஊர் பொது மக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News