உள்ளூர் செய்திகள்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-06 09:46 GMT
வீட்டுமனை பட்டா வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ், பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

அப்போது வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்கள் மற்றும் மடத்து நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

 அந்த நிலங்களை நீண்ட காலம் பயன்படுத்தும் விவசாயிகளின் குத்தகை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கற்பகம், முத்து சுப்பிரமணியன், நாராயணன், குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News