உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தொழிலாளர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு முதல்வர் பதக்கம்

Update: 2022-05-06 06:44 GMT
தன் உயிரை துச்சமாக நினைத்து தொட்டிக்குள் இறங்கிய பாண்டீஸ்வரனை அனைவரும் பாராட்டினர்.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயா பகுதி கொத்துக்காடு தோட்டத்தில் தனியார் சாய ஆலை உள்ளது. கடந்த நவம்பர் 14-ந்தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் கழிவு நீர் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படை வீரர்களில், பாண்டீஸ்வரன் என்பவர் விஷவாயு கசிந்த நிலையிலும் துரிதமாக செயல்பட்டு 5 பேரையும் மீட்டார்.

எனினும் 3 பேர் இறந்து விட்டனர்.தன் உயிரை துச்சமாக நினைத்து தொட்டிக்குள் இறங்கிய அந்த வீரரை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள் 5 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அவர்களில் ஒருவராக பாண்டீஸ்வரன் உள்ளார். அவரை தீயணைப்பு துறை அதிகாரிகள், சக வீரர்கள் வாழ்த்தினர்.
Tags:    

Similar News