தமிழ்நாடு செய்திகள்

தமிழக வெற்றிக் கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

Published On 2024-05-12 12:27 IST   |   Update On 2024-05-12 12:27:00 IST
  • ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கான சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

தொடர்ந்து கட்சியின் பெயரை புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கான சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை கட்சியில் சேர்ந்துள்ள புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.

தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி புதிய கட்சி தொடங்குவதற்கு கட்சி பெயர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பட்டியலை பத்திரிகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பாக வெளியிட வேண்டும். அதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ஏ-ன்படி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் பெயர் வருமாறு:-

தலைவர்- ஜோசப் விஜய்.

பொதுச் செயலாளர்- ஆனந்து என்ற முனுசாமி

பொருளாளர்-வெங்கடராமணன்

தலைமை நிலைய செயலாளர்- ராஜசேகர்

இணை கொள்கை பரப்பு செயலாளர்- தாஹிரா

இவ்வாறு புதிய நிர்வாகிகள் பெயர் முகவரியுடன் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News