தமிழ்நாடு செய்திகள்

நாம் சகோதரர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-12-20 20:36 IST   |   Update On 2025-12-20 21:45:00 IST
  • சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
  • சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அனைவரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் அன்போது இருக்க வேண்டும்.

வெறுப்புணர்வு பாவங்களை செய்ய தூண்டும்; அன்பு என்பது அத்தனை பாவங்களை போக்கும்.

இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்.

சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.

சிறுபான்மையினர் நலனில் எப்போதும் உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ராமநாதபுரம் மூக்கையூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம் ரூ.1.42 கோடியில் புனரமைக்கப்படும்.

தமிழக அரசின் அணுகுமுறையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களில் ரூ.597 கோடியில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 16 தேவாலயங்களில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கூடுதலாக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் மூலம் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளும் காலை உணவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News