தமிழ்நாடு செய்திகள்
பேராலயத்தில் மீனாட்சி... முருகன்... மதுரையில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா!
- டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள்.
- இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரவேற்பை பெற்றுள்ளன.
உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் மதுரை புனித மரியன்னை பேராலயத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது
கிறிஸ்மஸ் விழாவில் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிறுமியும், திருப்பரங்குன்றம் முருகன் வேடத்தில் சிறுவனும் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரவேற்பை பெற்றுள்ளன.