தமிழ்நாடு செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-12-20 21:11 IST   |   Update On 2025-12-20 21:11:00 IST
  • பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
  • ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம்.

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்களை காணலாம்.

தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணலாம்.

பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம், தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனையகம் உள்ளது.

மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் அங்கிருந்து நெல்லை மாநகர் அழகை பார்க்கும் வசதியும் உள்ளது.

Tags:    

Similar News