உள்ளூர் செய்திகள்
நுங்கு விற்பனை நடந்த போது எடுத்தபடம்.

திசையன்விளையில் களை கட்டிய நுங்கு விற்பனை

Update: 2022-05-05 10:19 GMT
திசையன்விளையில் நுங்கு விற்பனை களை கட்டி உள்ளது.
திசையன்விளை:

திசையன்விளை பஜாரில் கடந்த சில நாட்களாக நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.

 அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிகிடக்கின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து உடல்நலத்தை பாதுகாக்க நுங்கை விரும்பி வாங்கி செல்கின்றனர். இங்கு ஒரு கண் நுங்கு ரூ.7-க்கும், 3 கண் நுங்கு ரூ 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை கூடுதலாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் காத்து இருந்து விருப்பத்துடன் வாங்குகிறார்கள் மேலும் இங்கு நுங்கு, சர்பத் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.
Tags:    

Similar News