search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tisayanvilai"

    • ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் திசையன்விளையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலை மையில் திசையன்விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந் துள்ள கெட்டி மேளம் மகாலில் நடைபெற்றது.

    100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று கர்ப்பிணி பெண்களுக்கு புடவை மற்றும் பரிசு பொரு ட்கள் வழங்க ப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக விழா முடிவுற்றதும் 7 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெ ண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பினும் வீட்டில் நடைபெறும் வளை காப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதிகா சரவணகுமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சூசை ரத்தினம், பஞ்ச வர்ணம் ஜெயகுமார், வளர்மதி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி, பால சுப்ரமணியம், திசை யன்விளை பேரூர் இளை ஞரணி அமைப்பாளர் நெல்சன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், அனைச்சியார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவ்வலடி சரவணகுமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம்கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், கிங்ஸ்டார் சேர்மதுரை, அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கோகுல், புளியடி குமார், முத்து, எழில் ஜோசப், சாகுல் ஹமீது, முத்தையா, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேச்சுவார்த்தை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது.
    • வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழைகாலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    திசையன்விளை:

    தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை அரசு போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி முதல் திசையன்விளையில் சுற்றுவட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக பேச்சு வார்த்தை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது. இதில் நீர்வளத்துறை செயற்பொறி யாளர்கள் அண்ணாத்துரை, திருமலைக்குமார், பழனிவேல், உதவி செயற்பொறி யாளர் பேச்சிமுத்து ,திசையன்விளை வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜன், செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிந்திரன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலாளர் ஜான் கென்னடி மற்றும் விவசாயிகள் அரசு அதிகாரி கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்ட வெள்ளநீர் கால்வாய் மற்றும் பல்வேறு நிலையில் உள்ள பணிகள் முன்னேற்றம் குறித்து விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழைகாலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுகொண்ட விவசாயிகள் 13-ந் ேததி நடத்த இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கைப்பந்து, இறகு பந்து, எறிபந்து, கபடி மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பின்னர் பள்ளி மாணவர்கள் தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை சுற்றி வந்து பள்ளி தாளாளரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், விளையாட்டு கம்பத்தில் தீபத்தை ஏற்றி தடகள போட்டியை தொடங்கி வைத்தார்.

    12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற புனித அந்தோணியார் பப்ளிக் பள்ளிக்கு வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியின் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது.
    • 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவி லான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது. போட்டிகளை நகர செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. முடிவில் முதல் பரிசு பெற்ற ஆரல்வாய்மொழி அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுவீகர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பார் அண்ரூ ஜேசன் ஆகியோர் சார்பில் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-வது பரிசு பெற்ற அணிக்கு தங்கையா ஸ்வீட்ஸ் சார்பில் ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப் பட்டது. விழாவில் ராதாபு ரம் ஒன்றிய துணை அமைப் பாளர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து யூனியனில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார்.

    நெல்ைல மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், சாந்திகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மேகலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர்.
    • இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. 2-ம் நாள் கொடைவிழாவான நேற்று இரவு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது.

    கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் தலைமை யில் திசையன்விளை பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாங்கல்ய பொருட்கள் அடங்கியதாம்பூலத்தை கொடுத்து சுமங்கலி பூஜையை தொடங்கிவைத்தார்.

    கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர். விழாவில் தொழில் அதிபர்கள் தங்கையா கணேசன், கே.டி.பி.ஆர்.திவாகர், பாஸ்கர், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் புஸ்ப லெட்சுமி கனகராஜ், கடை வியா பாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் பழனி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    கொடைவிழாவில் இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா தொடர்ந்து 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் செய்துள்ளார்.

    • பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது.

    திசையன்விளை:

    பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது. 7-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மலாலாவின் பெருமை களைப் குறுநாடகம் மற்றும் உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.

    தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் பேசும்போது, கல்வி என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று எனக்கூறி மலாலா பெண்கல்விக்காக போராடி யதை எடுத்துரைத்தார். முதல்வர் பாத்திமா எலிசபெத் கூறுகையில், மலாலா கல்விக்காக செய்த தியாகங்களை எடுத்துக்கூறி மாணவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரியவாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி கற்றல் வேண்டும் என்றார்.

    • விழா நாட்களில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை உள்பட 21 வகை பூஜைகள் நடந்தது.
    • இன்று காலை கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு செங்கிடா காரசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை தொடங்கி இன்று வரை 2 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை உள்பட 21 வகை பூஜைகள் நடந்தது. இன்று காலை கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நெல்லை - திசையன்விளை இடையே என்ட் டு என்ட் பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது.
    • இந்நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பின் திசையன்விளை சங்கத் தலைவர் சாந்தகுமார் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை - திசையன்விளை இடையே என்ட் டு என்ட் என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடியது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர்.

    எனவே மீண்டும் பழைய வழிதடத்தில் இயக்க வலியுறுத்தி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்து இருந்தனர். மேலும் பல்வேறு சமுக அமைப்புகள் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சபாநாயகர் நடவடிக்கை

    இந்நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பின் திசையன்விளை சங்கத் தலைவர் சாந்தகுமார் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாக இயக்குனர் மோகனை தொடர்பு கொண்டு நெல்லை- திசையன்விளை இடைநில்லா பஸ்சை நான்குநேரி பஸ் நிலையம் செல்லாமல் புறவழி சாலை வழியான செல்லும்படி கூறினார். அவரது நடவடிக்கையால் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பஸ்கள் புறவழி சாலை வழியாக சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.
    • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.

    சேலம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), மல்டி டாஸ்கிங் (தொழில் நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ெஹவில்தார் பணிகளுக்கான தேர்வு- 2022 அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து தேர்வு நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், சேலம், நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதினர். விண்ணப்பதாரர்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம். இந்த வசதி அடுத்த மாதம் 4-ந்தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காலக்கெடு கிடையாது.

    தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்க் வசதியை பயன்படுத்தி விண்ணப்ப தாரர்கள் தங்களுக்குரிய பதிலளிப்புத் தாள்களுடன் தற்காலிக விடை குறிப்புகளை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

    • திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.
    • இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் நெல்லை- திசையன்விளை இடையே 'என்ட் டு என்ட்' என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு தினமும் காலை முதல் இரவு வரை தலா 10 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த இடைநில்லா பஸ்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடக்கும் இந்த பஸ்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வியாபாரிகள் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்த பஸ்களில் எபோதும் கூட்டம் அலை மோதும். இந்தநிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலை யத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்ற னர்.

    இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடு கிறது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடு கிறா ர்கள். எனவே முன்பு போல நெல்லை-திசையன்விளை 'என்ட் டு என்ட்' பஸ்களை இடைநில்லாமல் இயக்க கோரி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றிய மையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், விருட்சாசனம், வஜ்ராசனம், வீரபத்ராசனம், உஸ்தாசனம், யோகமுத்ரா போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    பின்னர் பள்ளியின் பின்னர் பேசிய முதல்வர் எலிசபெத் யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்துவர அறிவுறுத்தினர்.

    ×