உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 3500 டன் ரேசன் அரிசி

Update: 2022-05-05 07:05 GMT
நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் 3500 டன் ரேசன் அரிசி வந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி மற்றும் கோதுமை பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது.

தெலுங்கானாவில் இருந்து 42 வேகன்களில் 3500 டன் ரேசன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயிலில் வந்தது. சரக்கு ரெயில் வந்த ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News