உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மயில்ரங்கம் வாரச்சந்தை பணியை கலெக்டர் ஆய்வு

Update: 2022-05-05 06:05 GMT
தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மொத்தம் ரூ .15 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தை கட்டுமானப் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயகன் வலசு ஊராட்சி மயில்ரங்கத்தில் பல ஆண்டுகள் பழமையான வாரச்சந்தையாகும், இந்த வார சந்தையை மயில்ரங்கத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.

இந்த வார சந்தை பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது, தற்போது கடந்த ஆண்டு 2021 டிசம்பர் மாதம் 9ம் தேதி வேலப்பநாயக்க வலசு ஊராட்சி ரூ.1 லட்சத்தது 59 ஆயிரம், நபார்டு வங்கி நிதி ரூ.14 லட்சத்தது 35 ஆயிரம், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மொத்தம் ரூ .15 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தை கட்டுமானப் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்.

இந்த வாரச் சந்தை பணிகளை நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் நேரில் வந்து பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டார். 

அப்போது வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் ஜெயக்குமார், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார், வேலப்பநாயகன்வலசு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, நபார்டு வங்கி திருப்பூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராசு, ஈரோடு மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் அசோக் குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பிரபு, பூங்கொடி ஆகியோர் உடன் இருந்தனர். 

முன்பு சந்தையில் காய்கறிகள் மட்டும் விற்பனை செய்து வந்தனர், தற்போது காய்கறி, மளிகை பொருட்கள், ஆடு கோழி போன்றவைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பணி நிறைவுறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் சந்தை ஆரம்பிக்கஉள்ளனர்.
Tags:    

Similar News