உள்ளூர் செய்திகள்
திறப்பு விழாவில் மாணவர் முத்துவளவனுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.

சீரமைக்கப்பட்ட அரசு பள்ளி

Update: 2022-05-04 10:39 GMT
திருமங்கலம் அருகே ரூ. 23 லட்சத்தில் அரசு பள்ளி சீரமைக்கப்பட்டது.
திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக வீட்டுவசதி வாரியம் பகுதியில் இருந்த அரசுப்பள்ளி பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் இருந்தது. 

மேலும் இப்பள்ளி தோப்பூரில் செயல்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோப்பூர் கொரோனா சிகிச்சை மையம் திறந்துவைக்க வருகை தந்தபோது தோப்பூர் உயர்நிலைப்பள்ளியை சீரமைக்க வேண்டி மாணவர் முத்துவளவன் மனு கொடுத்தார். 

இதன் அடிப்படையில் ரூ.23 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட தோப்பூர் உயர்நிலைப்பள்ளியை கலெக்டர் அனீஷ்சேகர் திறந்துவைத்து முதலமைச்சரிடம் மனு அளித்த மாணவருக்கு புத்தகங்கள்  வழங்கி பாராட்டினார்.

 இதனைத்தொடர்ந்து கலெக்டர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News