உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற மனு செய்யலாம் - கலெக்டர் தகவல்

Published On 2022-05-04 08:01 GMT   |   Update On 2022-05-04 08:01 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற மனு செய்யலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் ெதரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி 20-3-2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனிதர்கள் வரும் 60 நாட்களுக்குள் அதாவது 18-5-2022-க்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20-3-2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
 
இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்த–வர்களின்  குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News