உள்ளூர் செய்திகள்
ஆழியார் அணையில் தொடரும் உயிரிழப்புகள்

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்: ஆழியார் அணையில் தொடரும் உயிரிழப்புகள்

Published On 2022-05-03 10:01 GMT   |   Update On 2022-05-03 10:01 GMT
ஆழியார் அணையில் ெதாடரும் உயிரிழப்புகளை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனைமலை,  
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது ஆகும். இந்த அணையில் தற்போது 82 அடி நீர் இருப்பு உள்ளது. 
 
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த ஆழியார் அணையை சுற்றிப்பார்க்க வந்து செல்கி–ன்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் ஆழியார் அணை, பூங்கா உள்ளி–ட்டவை கண்டு–களித்து வருகின்றனர். ஆழியாறு அணையின் தெற்கு பகுதியில் செயல்படாத படகு இல்லம் உள்ளது. 
 
அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் சிலர் அந்த படகு இல்லம் வழியாக சென்று ஆணையில் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். இந்த அணைப்பகுதியில் சேறும் சகதியும் அதிகளவில் உள்ளது. இதை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரும் அறிவதில்லை. நீரை பார்த்ததும் குதூகலமாக குளிக்கச் செல்கின்றனர்.அவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழக்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே தொடர்கதை–யாகும் இந்த உயிர் இழப்புகளைத்  தவிர்க்க பொது–ப்பணி–த்துறை மற்றும் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சுற்றுலா பய–ணிகளை அந்த இடத்திற்கு செல்ல தடை விதிக்க வேண்டும்.மேலும் ஒருவரை பாதுகாப்பு பணியில் அங்கு அமர்த்தவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News