உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி- வாலிபர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-05-02 04:51 GMT   |   Update On 2022-05-02 04:51 GMT
சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்தது தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம்:

மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குழந்தை திருமணம் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 16 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

சிறுமி குழந்தை பெற்றது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குரு பிரகாஷ் விசாரணை நடத்தியபோது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த அடைக்கன் மகன் அழகு ராஜா (வயது20) கப்பலூர் சிட்கோவில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அழகுராஜா சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்தது தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் அழகு ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News