உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

காலமுறை ஊதியம்- அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தல்

Published On 2022-05-01 07:18 GMT   |   Update On 2022-05-01 07:18 GMT
குடும்ப ஓய்வூதியம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு ஊட்டும் செலவினம் 5 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
உடுமலை:

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க, குடிமங்கலம் ஒன்றிய மாநாடு சோமவாரப்பட்டியில் நடந்தது.

மாநில துணைத்தலைவர் பாக்கியம், மாவட்ட தலைவர் சித்ரா, சி.ஐ.டி.யு., ஜெகதீஸ், வட்டக்கிளை தலைவர் ஒம்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு ஊட்டும் செலவினம் 5 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.400 மட்டும் வழங்கப்படுகிறது. 

முழுத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக சாந்தி, செயலாளராகலீலாள், பொருளாளராக காளீஸ்வரி, துணைத்தலைவர்களாக ரூபதி, கவிதா, துணை செயலாளர்களாக ஜெயமணி, சரஸ்வதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினராக ரேவதி தேர்வு செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News