உள்ளூர் செய்திகள்
பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்

மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2022-04-29 08:30 GMT   |   Update On 2022-04-29 08:30 GMT
மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
திருச்சி :

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தொட்டியம் வேளாண்மை விரிவாக்க கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைதுறை அட்மா திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் உள் மாவட்ட உழவர்கள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மசுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் அனைவரையும் வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் வரகுணபாண்டியன் வரவேற்றுப் பேசினார். வேளாண் அலுவலர் கௌரி சங்கர் மற்றும் துணை வேளாண்அலுவலர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர்.

வட்டாரஅட்மா தலைவர் சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இப்பயிற்சியில் முசிறி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் சிவசண்முகம் மற்றும் சரண்யாஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்தனர்.

இப்பயிற்சியில் மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆன கோடை உழவு மற்றும் சரிவுக்கு குறுக்கே தடுப்பு அமைத்தல் ஆகிய தொழில் நுட்பங்கள் எடுத்துக் கூறப்பட்டன. பாரத பிரதமரின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு பற்றிய நேரடி ஒளிபரப்பு விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. பொது சேவை மைய தொழில்நுட்ப அலுவலர்கள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த வேண்டிய ஆவணங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

வேளாண்மைத்துறை மானியங்கள் பற்றி வேளாண் உதவி இயக்குனர் எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் தொட்டியம் வட்டார விவசாயிகள் மற்றும் உழவர் நண்பர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் அனிதா நன்றி கூறினார்.


Tags:    

Similar News