உள்ளூர் செய்திகள்
தஞ்சை தேர் விபத்து

தண்ணீர் சாலையில் சூழ்ந்திருந்ததால் மின்சாரம் வேகமாக பரவி தாக்கியது- கிராம மக்கள் பேட்டி

Published On 2022-04-27 05:31 GMT   |   Update On 2022-04-27 05:58 GMT
களிமேடு முதன்மைச் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை ஏற்கெனவே இருந்த அளவைவிட சற்று உயரமாகப் போடப்பட்டது.
தஞ்சாவூர்:

தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்தது குறித்து களிமேடு கிராம மக்கள் கூறியதாவது:-

அப்பர் சதயவிழா தேர் எப்போதும் போல வழக்கமான அளவிலேயே செய்யப்பட்டது. இதனிடையே, களிமேடு முதன்மைச் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை ஏற்கெனவே இருந்த அளவைவிட சற்று உயரமாகப் போடப்பட்டது.

இதனால் தேரை முதன்மைச் சாலையில் இழுத்து வரும்போது ஆடி அசைந்து வந்தது. அப்போது, மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் உச்சிப்பகுதி உரசியது.

இதுவே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது. மேலும் சாமி வருவதையொட்டி சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்ததால் மின்சாரம் வேகமாக பரவியது. இதுவும் உயிரிழப்பு அதிகமாவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மின்சாரம் பாய்ந்த வேகத்தில் மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் நெஞ்சுப் பகுதியில் அழுத்தி முதலுதவி சிகிச்சை செய்தோம். இதன் மூலம் சிலர் உயிருடன் மீண்டனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பலரைக் காப்பாற்ற முடியாமல் போனது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News