உள்ளூர் செய்திகள்
சிறுவன் ஜரீஷ்

உலக நாடுகளின் பெயர்களை 1 நிமிடம் 20 நொடிகளில் கூறி 3.5 வயது சிறுவன் உலக சாதனை முயற்சி

Published On 2022-04-25 10:02 GMT   |   Update On 2022-04-25 10:02 GMT
கும்பகோணத்தில் உலக நாடுகளின் பெயர்களை 1 நிமிடம் 20 நொடிகளில் கூறி 3.5 வயது சிறுவனின் உலக சாதனை முயற்சியை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் பாராட்டினர்.
கும்பகோணம்:

கும்பகோணம் காமராஜ் நகர் மாதா கோவில் தெரு பகுதியில் வசிக்கும் தம்பதியினர் ஜோக்ரிட், சங்கீதா. இவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு  3.5 வயதில் இரட்டை குழந்தைகளாக ஜரீஷ் என்ற மகனும், பிரணிதா என்ற மகளும் உள்ளனர்.

இதில் பள்ளிப் படிப்பில் சேராத ஜரீஷ்  உலக வரைபடத்தில் உள்ள 13 நாடுகளின் பெயர்களையும், இந்திய மாநிலங்களின் தலைநகரங்களையும், இந்திய வரைபடத்தில் உள்ள மாநிலங்களின் பெயர்களையும், சதுரங்க நாணயங்கள் பெயர்களையும் சொல்லி அசத்திவருகிறார்.

மேலும் உலக நாடுகளின் 15 நாட்டின் தேசியக் கொடிகளின் பெயர்களையும், மனித உடலின் உள் மற்றும் வெளிப்புற உறுப்புகளின் பெயர்களையும் உதவியின்றி சொல்லி வருகிறார். இவை அனைத்தையும் 1 நிமிடம் 20 நொடிகளில் சொல்லியும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த போட்டியில் 1500 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சிறுவனின் இந்த சாதனை முயற்சியை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் பதிவு செய்து இவருக்கு கூர்மையான அறிவுடைய அற்புதக் குழந்தை எனும் சான்றிதழையும் பதக்க-ங்-களையும் வழங்கியுள்ளனர்.
Tags:    

Similar News