உள்ளூர் செய்திகள்
கைது

98 கிராம் தங்க நகைகளை திருடிய முன்னாள் வேலைக்கார பெண் கைது

Published On 2022-04-23 10:19 GMT   |   Update On 2022-04-23 10:19 GMT
சென்னை அபிராமபுரத்தில் வீட்டில் வைத்திருந்த வைரக்கல் பதித்த 98 கிராம் தங்கநகைகளை திருடிய முன்னாள் வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை, ஆழ்வார்பேட்டை, ஶ்ரீராம் காலனியை சேர்ந்த கருப்பையா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் பீரோவில் வைத்திருந்த வைரக்கல் பதித்த தாலியுடன் கூடிய சுமார் 9 சவரன் தங்க தாலிச்சரடு மற்றும் 3 சவரன் தங்க நகைகள் வைத்திருந்ததை சரிபார்த்தார்.

அதன் பின்னர்  மார்ச் மாதம் 14-ந்தேதி மீண்டும் கருப்பையா நகைகளை சரிபார்த்தபோது, வைரக்கல் பதித்த தங்க தாலிச்சரடு உட்பட 98 கிராம் தங்கநகைகள் அங்கு இல்லாமல் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கருப்பையா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு
செய்து போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தனலஷ்மி என்ற வேலைக்கார பெண் 7 மாதங்களாக வீட்டில் வேலை செய்து கடந்த ஜனவரி மாதம் வேலையை விட்டு நின்றது தெரியவந்தது. அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு தனலஷ்மியை பிடித்து விசாரணை செய்தபோது, தனலஷ்மி கடந்த ஜனவரி மாதம் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையை சுத்தம் செய்தபோது, பீரோவில் தங்க நகைகள் இருப்பதை அறிந்து, அவற்றை திருடிச் சென்று பின்னர் உடல்நிலை சரியில்லை எனக் கூறி வேலையை விட்டு நின்றது
தெரியவந்தது.

அதன்பேரில், வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை தனலஷ்மியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 98 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட தனலஷ்மி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News