உள்ளூர் செய்திகள்
ஆர்.என். ரவி, ராஜ்பவன்

கருப்பு கொடி வீசியர்கள் மீது நடவடிக்கை- தமிழக டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்

Published On 2022-04-19 21:10 GMT   |   Update On 2022-04-19 21:10 GMT
தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவி நேற்று சென்ற போது பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை தமிழக காவல்துறை மறுத்திருந்தது. 

மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என 
காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஆளுநரின் வாகனம் சென்றபோது அங்கு கூடி இருந்தவர்கள் கார்களை நோக்கி கொடிகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி ஆளுநரின் பாதுகாப்பு கான்வாய் கடந்து சென்றது. 

ஆளுநரின் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது சட்டப்பிரிவு 
124-ன்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News