உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் - மும்பை வாராந்திர ரெயில் இயக்கம்

Update: 2022-04-17 06:36 GMT
கோவைக்கு 1.20 மணிக்கும், திருப்பூருக்கு 2.10 மணிக்கும், ஈரோட்டுக்கு 3 மணிக்கும், சேலத்துக்கு 4.10 மணிக்கும், திருப்பத்தூருக்கு 5.35 மணிக்கும் ரெயில் சென்று சேரும்.
திருப்பூர்:

திருவனந்தபுரம்-மும்பை சி.எஸ்.எம்.டி. வாராந்திர ரெயில் எண்.16332 மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 23 ந் தேதி அதிகாலை 4.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தை அடையும். 

போத்தனூர் ரெயில் நிலையத்தை மதியம் 1.05 மணிக்கும், கோவைக்கு 1.20 மணிக்கும், திருப்பூருக்கு 2.10 மணிக்கும், ஈரோட்டுக்கு 3 மணிக்கும், சேலத்துக்கு 4.10 மணிக்கும், திருப்பத்தூருக்கு 5.35 மணிக்கும் ரெயில் சென்று சேரும்.

இதுபோல் மும்பை சி.எஸ்.எம்.டி. திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் எண்.16331 24ந் தேதி இரவு 8.35 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். 

திங்கட்கிழமை திருப்பத்தூருக்கு இரவு 7.15 மணிக்கும், சேலத்துக்கு 8.45 மணிக்கும், ஈரோட்டுக்கு 9.45 மணிக்கும், திருப்பூருக்கு 10.30 மணிக்கும், கோவைக்கு 11.30 மணிக்கும், போத்தனூருக்கு 11.55 மணிக்கும் சென்று சேரும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News