உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பாலித்தீன் கவர்களை நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் பார்வையிட்ட காட்சி.

ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பாலித்தீன் கவர்கள் பறிமுதல்

Published On 2022-04-16 10:37 GMT   |   Update On 2022-04-16 10:37 GMT
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலித்தீன் கவர்கள், பேப்பர் கப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
காங்கயம்:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், பேப்பர் கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் கடைகள் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் கரூர் வெங்கமேடு பகுதியில் இருந்து ஆம்னி வேனில் பாலித்தீன் கவர்கள், பேப்பர் கப்புகள் கொண்டு வரப்பட்டு காங்கயம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சப்ளை செய்யும் பணியில் ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பாலித்தீன் கவர்கள், பேப்பர் கப்புகள் ஆகியவற்றை சப்ளை செய்ய தடை விதித்தார். உடனே இது குறித்து அவர் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கவே அவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார். 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலித்தீன் கவர்கள், பேப்பர் கப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும். மேலும் ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். அதனை சப்ளை செய்ய வந்த வேன் டிரைவர் காங்கயம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது 40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காங்கயம் பகுதி வியாபாரிகள்  தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், கமிஷனர் வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News